Wednesday, September 30, 2009

வ(எ)ண்ணச்சிதறல்கள்

ஆதி தாமிராவின் "குருவி விமர்சனம் - மீள் பதிவைப்" படித்து குலுங்கி குலுங்கி சிரித்ததில் ஒண்ணே கால் கிலோ எடை குறைந்து விட்டது. மனிதர், இருநூற்று ஐம்பது பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் ரகசியம் தெளிவாய்ப் புரிந்தது. இவருடைய "7.10pm மூன்றாவது பிளாக்" கதை, இவர் எழுதிய அனைத்திலும் ஆகச் சிறந்ததென்பது எனது எண்ணம். படிக்காதவர்கள், இங்கே படித்து விடுங்கள். கொசுறுத் தகவல் : புகைப்படம் எடுப்பதிலும், குறும்படத்திலும் தாமிரா அலையஸ் ஆதி, ஒரு கில்லாடிக் கிட்டு. ****************************************************************************************
இரண்டு நாட்களுக்கு முன்பு படித்த ஒரு செய்தி, ஒரு இன்ப அதிர்ச்சி தந்து விட்டது. ஜம்மு காஷ்மீரில் ஒரு வீட்டில் துப்பாக்கிகளோடு நுழைந்து இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்ற தீவிரவாதிகளில் ஒருவனது துப்பாக்கியைப் பறித்து அனைவரையும் சுட்டு விரட்டி விட்டாள் அந்த வீரப் பெண். இதைப் படித்தாவது, பெண்களிடம் ரவுசு செய்யும் கூட்டம் திருந்துமா? தோசை மட்டும் தான் சுடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பலருக்கு அதிர்ச்சியில் அட்டாக் வந்திருக்கும் இதைக் கேள்விப் பட்டு. சபாஷ். ****************************************************************************************
உன்னைப் போல் ஒருவன் - கிட்டத் தட்ட வலைப்பூ எழுதும் அத்தனை பேரும் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கப் போட்டு விட்டார்கள். பாராட்டி எழுதியவர்கள்தான் அதிகம் என்றாலும், திட்டமிட்டு ஒரு கூட்டம், இந்தப் படத்திற்கு பார்ப்பன சாயம் பூசுவது முகம் சுளிக்க வைக்கிறது. காமன் மேன் - ஒரு சாதரண மனிதன் தீவிர வாதத்துக்கு எதிராய் வெகுண்டெழுந்தால் என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது - அவனை காயடித்து கசக்கிப் போட்டு விடுவார்கள் நடைமுறை யதார்த்தத்தில். ஆனால் அவனை ஒரு சூப்பர் மேன் ரேஞ்சுக்கு காட்டியிருக்கும் ஒரு குறையத் தவிர, படத்தில் வேறு எந்தக் குறையும் தெரியவில்லை. பெரும்பாலானோர் சொன்னது போல், உ போ ஒ - வை விட, புதன் கிழமை அற்புதம்.
****************************************************************************************
இங்கிருந்து ஊருக்கு விடுப்பில் சென்று திரும்பிய ஒரு நண்பரின் மூன்று வயது மகளைப் பார்த்துக் கேட்டேன் - "மொட்டை எங்கம்மா அடிச்சாங்க?" பளிச்சென்று பதில் வந்தது, "தலைல தான் அங்கிள், வேற எங்க அடிப்பாங்க (அம்மா, இந்த அங்கிளுக்கு மொட்டை எங்க அடிப்பாங்கன்னே தெரியல, பாரேன்).
சிறுவர்களின் சமயோசிதம் வளர்ந்து கொண்டே போகிறது, அவர்களை ஒன்றும் புரியாதவர்களாய் நாம் நினைத்துக் கொள்வது தான் நகைச்சுவை.

*****************************************************************************************
ஏற்கெனெவே மதுர, கில்லி, பகவதி, வில்லு, ஆதி, குருவி என்று விஜய் நடித்த அத்தனை படங்களும் ஆயிரம் முறைகளுக்கு மேல் ஓடியாகி விட்டது - எங்கள் வீட்டு ப்ளேயரில். இப்போது, "நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மட்ட, மோதிப் பாரு வீடு போயி சேர மாட்ட" ஒலிக்க ஆரம்பித்து இருக்கிறது, மனைவியின் மொபைல் போனில். சனி, ஞாயிறு வந்தாலே குலை நடுங்குகிறது "வேட்டைக்காரன்" பாடல்களைக் கேட்டு கேட்டு.  

மனைவி மொபைல் என்றதும் அவர் தான் விஜய் ரசிகரோ என்று நினைத்து விட்ட அப்பாவிகளுக்கு - விஜயின் தீவிர வெறியன் என்னுடைய நாலரை வயது பையன். என்ன கொடுமை சார் இது.


போடு அடியப் போடு... போடு அடியப் போடு... ஹே...  
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா..
****************************************************************************************
ரசித்த தத்துவம்


காதல்ங்கறது விஜய் படம் மாதிரி, பாக்காதவன் பாக்கத் துடிப்பான், பாத்தவன் சாகத் துடிப்பான்.
****************************************************************************************


எழுதியவனுக்கு
நன்றி கூறாமல்
வாசித்து முடித்தான்


பலத்த
கைத்தட்டல்களின்
முடிவில்

அவன் மனதை
உறுத்த ஆரம்பித்திருந்தது...
கவிதை

-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி http://cliffnabird.blogspot.com

*****************************************************************

8 comments:

sathyakumar said...

வ(எ)ண்ணச்சிதறல்களில் எனக்கு பிடித்து செந்தில் கணேஷ் செண்பகமூர்த்திஈன் கவிதைகள்(மலைமுகடு சிறுபறவை- ??!!) .........மனிதர் மிகவும் கூர்மையாக எழதுகிறார் .....உங்கள் பெருந் தன்மைக்கு பாராட்டுகள்,உங்கள் வலை பூவில் அவரின் கவிதையை தந்ததற்கு !!!

உண்மையின் மைந்தன்

வணங்காமுடி...! said...

நன்றி சத்யா... பெருந்தன்மை எல்லாம் ஒண்ணும் இல்லை நீங்க வேற... செந்தில் கணேஷ் பேரைப் போட்டா, அவர் பேரை வச்சாவது நம்ம கடைக்கு ஆள் சேக்கலாமேங்கற நப்பாசை தான்

Cliffnabird said...

ஆமா இவர் கடைக்கு ஆள் வரவைக்க என் கவிதைய போட்டராம... யாரு காதுல பூ வைக்குறேல்..? அவர் கடைக்கு ஆள் சேர்க்க அவருக்கு தெரியாத எழுத்து வித்தைகளா என்ன? என்னை உற்சாக படுத்த அவர் செய்யும் ... HURRY UPS தான் எல்லாம்!!

மலைமுகடு சிறுபறவை

Cliffnabird said...

ஆமா இவர் கடைக்கு ஆள் வரவைக்க என் கவிதைய போட்டராம... யாரு காதுல oooiiiiiii பூ வைக்குறேல்..? அவர் கடைக்கு ஆள் சேர்க்க அவருக்கு தெரியாத எழுத்து வித்தைகளா என்ன? என்னை உற்சாக படுத்த அவர் செய்யும் ... HURRY UPS தான் எல்லாம்!!

மலைமுகடு சிறுபறவை

INFOSHAAN said...

எனக்கென்னவோ செந்தில் கணேஷ் அவன் கவிதை மூலமா யாரையோ silent-ஆ அட்டாக் பண்ற மாதிரி இருக்கு... ஹலோ உங்களுக்கு ஏதாவது புரியுது?????

வணங்காமுடி...! said...

// S H A N K A R said...
எனக்கென்னவோ செந்தில் கணேஷ் அவன் கவிதை மூலமா யாரையோ silent-ஆ அட்டாக் பண்ற மாதிரி இருக்கு... ஹலோ உங்களுக்கு ஏதாவது புரியுது?????
//
வாங்கண்ணா வாங்க, எதுக்கு இந்தக் கொல வெறி..வேணாம்... அப்புறம் நான் இன்னொரு கவிதை எழுதிடுவேன்...ஜாக்கிரதை..

Rajesh AR said...

Nice collections.. rock on man!

வணங்காமுடி...! said...

@ Rajesh AR

Thank you very much....