Thursday, October 15, 2009

கவிதைக்கு அலைபவன்

"பசி" என்று தலைப்பிட்டு
எழுதத் துவங்கினேன்
ஒரு கவிதை...


எவ்வளவு யோசித்தும்
இரண்டு வரிக்கு மேல்
நகராமல் முரண்டியது
கற்பனைக் குதிரை...


சற்றுமுன் சாப்பிட்ட
பிரியாணிக்கு பில்லை வைத்துவிட்டு
பவ்யமாய் நின்றான்
ஓட்டல் சிறுவன்...


ஏக்கப் பெருமூச்சுடன்
நின்றிருக்கும் இவனுக்கொரு
ஏழு, எட்டு வயதிருக்குமா?


சட்டென்று வந்த சந்தோஷத்தில்
தாராளமாய் டிப்ஸ் வைத்து
நகர்ந்தேன்...
"குழந்தைத் தொழிலாளி" என்று
அடுத்தொரு கவிதை எழுத...


--- சுந்தர்

3 comments:

Rajesh AR said...

Haha.. Typical middle class life.. We all do this!

gd one

வணங்காமுடி...! said...

Thank you Rajesh...வசிஷ்டர் வாயால பாராட்டு... மிக்க நன்றி

ADMIN said...

மிகவும் ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.. கருத்துக்கள் எம்மை கவர்ந்தன்.. நன்றி!