Wednesday, October 29, 2008

எரிகின்ற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்..!


உங்களில் சிலர் இன்று தினமலரில் அந்த கேவலத்தை வாசித்திருக்கக்கூடும். மக்களை இதற்கு மேல் அவமானப்படுத்தவோ அசிங்கப்படுத்தவோ முடியாது. ஒரு நாளிதழின் வேலையை விட்டுவிட்டு தினமலர் எப்போது புலனாய்வு பத்திரிக்கை ஆனது? அதாவது பரவாயில்லை. அந்த செய்தியின் தொனி என்னவென்றே புரியவில்லை? நக்கலா அல்லது உண்மையிலேயே அதை ஒரு செய்தியாக எண்ணித்தான் வெளியிட்டார்கள?
சரி சரி. பூடகம் வேண்டாம். செய்தி இதுதான்.
ரஜினி அதிரடி. இலங்கை பிரச்சனையில் தனி ஆவர்த்தனம் செய்ய முடிவு. தமிழகத்தின் எந்த ஒரு பிரச்சனைக்கும் தன்னுடைய பாணியில் தனியாக போராடுவது (?) ரஜினி ஸ்டைல். அதையே தற்போதைய இலங்கை பிரச்சனைக்கும் கடைபிடிக்க போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குசேலன் தோல்வி, அரசியலுக்கு வரச்சொல்லி ரசிகர்களின் தொந்தரவு, அதனால் எழுந்த அதிருப்தி, சரிந்த இமேஜ் மற்றும் பல கோடிகளில் கோலாகலமாக உருவாகி வரும் எந்திரனின் கலெக்க்ஷன் பற்றிய பயம் - ஆக தன்னை சூழ்ந்துள்ள இத்தனை தொல்லைகளுக்கும் எதிராகவும் இலங்கை விஷயத்தைகையில் எடுத்தால்? வேறு என்ன வெற்றி தான்.... எப்போதும் இளிச்சவாயனாக்குவது தமிழ் நாட்டின் தமிழனை. இந்த முறையும் அதேதான் ஆனால் அதற்கு இலங்கை தமிழனின் பிரச்சனை தானா கிடைத்தது. இதைஎல்லாம் படிக்கும் போது அசூசையாய் இருக்கிறது.
தமிழனுக்கு என்றுதான் விடிவு காலமோ?

************************************************************************************

அதே நாளிதழில் கண்ட இன்னொரு புகைப்படம் கொதிக்க வைத்து விட்டது. வைரமுத்து கருணாநிதிக்கு இலங்கை தமிழஅனுக்கு உதவ காசோலை அளிக்கிறார். வாயெல்லாம் பல். ச்சீ . வெட்கம் கெட்டவர்கள்.

அந்த புகைப்படத்தை இங்கே கொடுக்கலாம் என்று மறுபடியும் தினமலரை மேய்ந்த போது அதே விஷயம், ஆனால் இந்த முறை சரவணபவன் அதிபர். தன் படை சூழ சிரித்துக்கொண்டே காசோலை வழங்கும் அற்புதமான காட்சி. இவர்கள் கொடுக்கும் காசு எதற்கு ? அங்கே அவர்களின் பிணத்தின் மீது போடவா? தூத்தேரி. இலவச உணவாம். மத்திய அரசு உதவியாம். அதையும் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே வழியாக தமிழனை சென்று சேருமாம். ஒரு பக்கம் தமிழன் மேல் குண்டு வீசிவிட்டு இன்னொரு கையால் உணவு கொடுப்பார்களாம். இதற்கு பேசாமல் இலவச பாடை வழங்கலாம்.

*************************************************************************************

3 comments:

Cliffnabird said...

Tamil Font innum yenakku sari vara type panna varala sundar.

The title itself Pulverized everything and gave concerned the paste that concerned can apply and appear what they really are!! The height of pity here is we people are good at emotionally strive through all these till the next elections come!! Then the same Bullshit!! If you rightly have wrong people in all places there is a very little (hope) that you can do!! one is expressing our views like this!! THis may trigger many minds and i hope the resultant force would be what we are righthly expecting now!! But still it doesnot change anything right away as we would have wanted it to be!
I wonder, if a matured guy(under any circumstances), could ever smile and pose while giving a RELIEF FUND? Doesnt it all pose the piled up vindictive nature of ones? Do they deem themselves to be kings of mercy? Will they think of sending a cheque if they have their sister/brother over there?
இதற்கு பேசாமல் இலவச பாடை வழங்கலாம். - I Acquiesce.

I started admiring your style of writing. Write More!!

INFOSHAAN said...

//தமிழ் font பயன்படுத்தும் நாங்கள் ஒன்றும் வேற்றுகிரகவாசியல்ல.... நாகரீகம் என கருதி சிலர் எனக்கு டமில் அவ்வளவா வரத்து என சொல்வது போல இருக்கிறது இந்த டுபாக்கூர் காரணம்.
//
பாதிப்பின் வலி அதை உணர்ந்த உணர்பவகளுக்கே தெரியும் .
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது ஒரு சம்பவம் அவ்வளவே . ஜெயம்கொண்டான் படத்தில் இதை அருமையான REALTIME உதாரணம் மூலம் உணர்த்துவான் வில்லன்.

என்னை பொருத்தமட்டில் அங்கு பசியினால் அழும் குழந்தைக்காக ஒன்றாக இங்கு குரல் கொடுக்கிறார்களே அதுவே மெச்ச வேண்டியதுதான்.

Anonymous said...

Ungalin urainadai pramatham...