நேற்று முன்தினம் தீபாவளி. ஊரில் இருந்திருந்தால் கோலாகலமாக கொண்டாடிஇருக்கலாம். இங்கே என்ன செய்ய முடியும். இனிப்புகள் பரிமாறிக்கொள்ளும்ஒரு வாய்ப்பாகவே ஒவ்வொரு தீபாவளியும் கடந்து போகிறது. அதே போலசம்பிரதாயமான வாழ்த்தும்.
அப்படி நினைத்துக்கொண்டுதான் ஒரு வாழ்த்தை இ-மெயிலில் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தேன். "தீப ஒளி அறியாமை இருளை அகற்றி நம் வாழ்வை வளப்படுத்தட்டும்" இதுதான் அதன் சாரம்.இந்தசம்பிரதாயமான வார்த்தைகளுக்கு ஒரு தீவிரமான எதிர்வினையை சத்தியமாகநான் எதிர்பார்க்கவில்லை.
நண்பர் ஒருவர் உடனே பதில் கொடுத்திருந்தார். பதில் வாழ்த்தை எதிர்பார்த்துஅசுவாரசியத்துடன் மெயிலை திறந்த எனக்கு காத்திருந்தது ஓலை வெடி. நண்பர் தன்னை நாத்திகன் என்றும், இது போன்ற வாழ்த்துக்களை தனக்கு அனுப்பவேண்டாம் என்றும் குறிப்பிட்டு அதற்கெல்லாம் உச்சமாக தீபாவளியே ஒருஅறியாமை தான் என்றும் சுட்டியிருந்தார். நிறைய யோசிக்க வைத்துவிட்டதுஇந்த எதிர்வினை.
தீபாவளிக்கென்று நான் விபூதி, குங்குமம் ஒன்றும் அனுப்பி வைத்து விடவில்லை. கடவுள் பூமிக்கு வருகிறார் என்று பிரசங்கமும் செய்யவில்லை. அட... அதெல்லாம் போகட்டும். இந்த வாழ்த்தை பத்து பேருக்கு உடனே அனுப்பாத, தீபாவளியை நம்பாத நாத்திகர் யாவரும் நாசமாய்ப் போவார்கள் என்று சாபம் கூட இடவில்லை. அனுப்பியது ஒரு வாழ்த்து. நல்லா இருங்க என்று வாழ்த்த ஆன்மிக சக்தி தேவை இல்லை. மனம் இருந்தால் போதும்.
என் பரம விரோதி என்று நான் கருதும் ஒருவர் எதிரில் வந்து எதாவது வாழ்த்தும் விதமாக முகமன் கூறினால், அது நான் உடன்படாத ஒரு விஷயம் என்றாலும், என்னை அறியாமல் அதை ஏற்கும் விதமாக புன்னகை என் முகத்தில் அரும்பிவிடுவதை இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.
மனிதனை ஆற்றுப்படுத்த தோன்றியவையே மதங்கள். குழந்தை மனம் கொள் என்று கிருஷ்ணரும், உன்னில் சிறியோனுக்கு உதவு என ஏசுவும், எந்த காரணத்திற்காகவும் வன்முறை ஏற்கப்படாது என நபி அவர்களும் வித விதமாக கூறிய எல்லாம் வலியுறுத்தும் கருத்து ஒன்றேதான்.
ஆனால் பண்பாடும் கலாச்சாரமும் முழுமையாய் ஏற்பட்டுவிட்ட சமுதாயத்தில் மதங்களின் அவசியம் இல்லாமல் போய் விடலாம்.
வாழ்த்துக்கு எதிர்வினை ஆற்றிய நண்பரின் நிலையில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று எண்ணிப்பார்த்தேன். நேரில் சந்திக்கும்போது இதமாக அந்த வாழ்த்தை மறுத்திருப்பேன் அல்லது பேசாமல் அந்த மெயிலை டெலீட் செய்து விட்டு வேலையை பார்த்திருக்க கூடும்.
பற்பல மூட நம்பிக்கைகள் நிறைந்த, மக்களை இன்னும் பிரிவினைப்படுத்தியே வைத்திருக்கிற ஒரு மதத்தை வாழ்முறையாய் கொண்டிருக்கும் எனக்கு அடுத்தவர் மனம் எந்த விதத்திலும் புண்பட்டுவிடக் கூடாது என்ற தன்முனைப்பு இருக்கும்போது, எதையும் பகுத்து ஆராய்ந்து பின்பே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ள நாத்திகன் எப்படி இருக்க வேண்டும்?
எனக்கு தெரியவில்லை.... என் கருத்து தவறாகவும் இருக்கலாம்...... இதற்கு உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.
Wednesday, October 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
நாத்திகம் - மனிதனை சுற்றி மேய்ந்திருந்த அறியாமை என்னும் வேலியை பெயர்த்தெறிந்து உலகமெங்கும் உள்ள பரசவ காற்றை வேறுபாடின்றி சுவாசிக்கவும்,குறிகிய மனநிலை விட்டொழிந்து பரந்த மனதுடன் குறிப்பாக அன்புடன் அனைவரையும் நேசிக்கவும் கண்டறியப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.அந்த அறியாமை என சொல்லபட்டதில் ஒரு பகுதிதான் கடவுள் நம்பிக்கை என்பது என் நம்பிக்கை. ஆனால் இன்று கடவுள் என்ற ஒன்று மட்டுமே நாத்திகவாதத்தின் எதிரான ஒன்றாக சிருஷ்டிக்க பட்டு மற்ற அனைத்து அறியாமையும் மறக்கபட்டதன் காரணம் , வீண் விளம்பரமே ,அரசியல்வாதிகள் விளம்பரத்திற்க்கு ரஜினியையும் கமலையும் வம்புக்கு இழுப்பது மாதிரித்தான்.மதம் அல்லது ஏதோ ஒரு ஜாதி பெயர் சொல்லி தான் உயர்ந்தவன் என கேவலமாக மார் தட்டி கொள்ளும் கேனையர்களுக்கும் , நாத்திகன் என தன்னை சுருக்கி கொள்ளும் சிலருக்கும் பெரிதாக வித்தியாசமில்லை. அதைவிட கேவலம் தான் சார்ந்த மதம் தனது விருப்பு வெறுப்புக்கு சாதகமில்லை என வேறொன்றில் தன்னை நுழைத்து கொள்வது.போகுமிடமும் சாதகபடவில்லைஎன்றால்..
அப்படியே வாழ்நாள் முழுக்க மாறி கொண்டே இருப்பார்களா...அல்லது போகுமிடம் நூறு சதவீதம் பரிசுத்தம் என இவர்களால் ஆணித்தரமாக சொல்ல முடியுமா..இவர்களுக்கும் இன்று கொள்கைகளே இல்லாமல் கட்சி மாறும் அரசியல்வாதிகளுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை.இவர்களுக்கு என்ன தேவை தான் ஏதோ கூட்டத்தை சார்ந்தவன் என தன்னை அடையாளப்படுத்தி கொள்ள அடையாளம் அதற்காக எந்த கூட்டத்துக்கும் தாவுவார்கள். நல்ல மனிதனாக வாழ நினைத்தால் எந்த கூட்டத்துக்குள் இருந்தும் வாழலாம். கூட்டம் மாறுவதால் அடையாளம் வேண்டுமானால் மாறலாம்.சுய பண்பாடு நெறிமுறையோடு வாழ்வது நம் மனதை பொறுத்தே அமைகிறது. குழந்தைகளின் சிரிப்பை போல விகல்பமில்லாதது தான் பண்டிகைகள் . அதனை சார்ந்த மனிதர்களுக்கு தன்னால் முடிந்த சந்தோசத்தையும் குதுகலத்தையும் வழங்குகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னாலும் பண்டிகைகளுக்கான சிறுவயது சந்தோசங்கள் நிறைய மறைந்து கிடைக்கின்றன. தன்னுடைய லூசுத்தனமான அல்லது நல்ல கொள்கைகளை பண்டிகை போன்ற பொது விசயங்களில் நுழைப்பதை தவிர்த்து பூமி பந்து சுழல போகின்ற கொஞ்ச நாட்களாவது தன்னால் முடிந்த நல்ல சந்தோசங்களை கொடுத்து நல்ல சந்தோசங்களை பெற்று , விடைபெறும் நேரம் வரும்போது விடைபெறலாமே ......
நன்றி சங்கர்.
"இவர்களுக்கு என்ன தேவை தான் ஏதோ கூட்டத்தை சார்ந்தவன் என தன்னை அடையாளப்படுத்தி கொள்ள அடையாளம் அதற்காக எந்த கூட்டத்துக்கும் தாவுவார்கள். நல்ல மனிதனாக வாழ நினைத்தால் எந்த கூட்டத்துக்குள் இருந்தும் வாழலாம். கூட்டம் மாறுவதால் அடையாளம் வேண்டுமானால் மாறலாம்."
அடையாளம் மிக முக்கியமான ஒன்று என்றே நான் நினைக்கிறேன். உலகத்தில் மிகப்பெரிய வலி அல்லது அவமானம் என்பது அடையாளம் அற்றுப்போவதுதான். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மஹாபாரத கர்ணன். சுய அடையாளமின்மையின் முழு வேதனைகளை தன் வாழ்நாள் முழுதும் அனுபவித்தவன். ஒவ்வொரு முறையும் அடையாளம் பற்றிய கேள்வி எழும்போதும் தன்னை, தன் திறமையை மீள்நிரூபணம் செய்ய வேண்டிய கட்டாயம். அரசனாக முடிசூடியும், தன் மனைவியிடம் கூட அவனுக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. அவள் ஒரு நாள் கூட தன் கையால் உணவு பரிமாறியதில்லையாம். தேரோட்டியின் மகன் தானே என்ற பரிகாசம். கர்ணனின் வாழ்க்கை ஆராய்ச்சி செய்யப்படவேண்டிய விஷயம் என்று நான் கருதுகிறேன்.
நான் முன்பே குறிப்பிட்ட படி ஆற்றுப்படுத்தும் நோக்கத்துடன் தோன்றியவையே மதங்கள். பிற்சேர்க்கையாய் சேர்ந்துவிட்ட சாதிகள், பெரிதுபடுத்தப்பட்ட சம்பிரதாயங்கள், போன்றவற்றால் வெறியாய் உருவெடுத்துவிட்ட நிலையில், தான் சார்ந்த ஒரு இடத்தில் வேறுபட்ட கருத்து இருந்தால் இன்னொன்றை நாடுவது என்னை பொறுத்தவரை தவறாக தெரியவில்லை. எல்லா சாலைகளும் ரோம் நகரத்தை நோக்கி செல்கின்றன என்பதை போல எல்லா நம்பிக்கைகளும் அடையும் இடம் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
மிகச்சிறந்த விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. உன் எழுத்து நடை உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. நீ ஏன் ஒரு வலைப்பூ ஆரம்பிக்க கூடாது? யோசிக்கவும்.
வணங்காமுடி அவர்களுக்கு நன்றி பதிலுரைக்கு ,
/நல்ல மனிதனாக வாழ நினைத்தால் எந்த கூட்டத்துக்குள் இருந்தும் வாழலாம். கூட்டம் மாறுவதால் அடையாளம் வேண்டுமானால் மாறலாம்.சுய பண்பாடு நெறிமுறையோடு வாழ்வது நம் மனதை பொறுத்தே அமைகிறது/
கர்ணன் அவமானபட்டதற்கான அடையாள காரணம் வேறு ,
நாம் இங்கே விவாதிக்கும் அடையாளம் வேறு.
உன் மேல் நம்பிக்கை இல்லாமல்தான் கூட்டம் மாறுகிறாய். அப்படி
கூட்டம் மாறிய பின்பு உதாரண யோக்கிய புருஷனாக மாறிவிட்டாய் என ஆணித்தரமாய் சொல்ல முடியுமா........
அனைத்தும் நம் மனது சம்பந்தப்பட்ட விஷயம் , எல்லாவற்றிலும் இருக்கும் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு திருப்தியாக வாழலாம். கூட்டம் மாறுவது எல்லாம் சும்மா பயந்தாகொல்லித்தனம் .
||என் பரம விரோதி என்று நான் கருதும் ஒருவர் எதிரில் வந்து எதாவது வாழ்த்தும் விதமாக முகமன் கூறினால், அது நான் உடன்படாத ஒரு விஷயம் என்றாலும், என்னை அறியாமல் அதை ஏற்கும் விதமாக புன்னகை என் முகத்தில் அரும்பிவிடுவதை இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.|| - Sari thaan, irundhalum, samayatthil eruvaridayeh ulla nerukaathaiyum poruthe idhu amayum yendru karudha thondrukirathu!! Sometimes i have even told something like "what is there to celebrate a birthday?" to my close quarters, but would not dare replying to someone with whom am not that close. That doesnt mean i dont respect their wishes but means that i have close relationship that i can immediately tell them what my heart says!! But the above case slightly varies here, I cant say someone "Never wish me again", This is very harsh even if you tell this to yourself!!
If you feel that you have learnt something that made others look like fools infront of you, the better way should be getting along with them and insisting your point in a nice way and in right time!! By saying them "your ways are wrong" you dont achieve any.
I happened to read this from sankar's Comment,
"(L)" = ||அதைவிட கேவலம் தான் சார்ந்த மதம் தனது விருப்பு வெறுப்புக்கு சாதகமில்லை என வேறொன்றில் தன்னை நுழைத்து கொள்வது.போகுமிடமும் சாதகபடவில்லைஎன்றால்..
அப்படியே வாழ்நாள் முழுக்க மாறி கொண்டே இருப்பார்களா...அல்லது போகுமிடம் நூறு சதவீதம் பரிசுத்தம் என இவர்களால் ஆணித்தரமாக சொல்ல முடியுமா..|| One thing is sure whether it is you or me or anyone, whatever we do today is verily right to us!! And though we happen to repent to things we did on past, it is always not possible to be someone else other than you!! I have always been telling everyone, that religions are like divider lines that we see in roads, it can neither stop you riding on them nor hit you going not caring, its all guidelines and nothing much, if you follow you will be safe!! Samething applies to Atheist too, if they believe in their theories they have all the rights to be what they are!! Whatever you talk about IDENTIFICATION or CHANGING IDENTIFICATION are all bullshits, they just dont make any sense to me!! Human is made to think, when he/she decides there is no other objection!! COWARDS stay in the same pond if they see a better falls in front!! I am not justifying anything here!! BUT men are free to be what they want to be!! its not identification or Changing Identification. IF you afterall coming to say the Sperms& Intercourse decide what your religion to be then there is none other than one religion that either one of us dont belong to!! SO IDENTIFICATION or CHANGING THEM are not SIN!! FIRST UNDERSTAND THAT!! Then coming to the point "நாம் இங்கே விவாதிக்கும் அடையாளம் வேறு.
உன் மேல் நம்பிக்கை இல்லாமல்தான் கூட்டம் மாறுகிறாய். அப்படி
கூட்டம் மாறிய பின்பு உதாரண யோக்கிய புருஷனாக மாறிவிட்டாய் என ஆணித்தரமாய் சொல்ல முடியுமா........" I believe in your Knowledge, you ask this again to yourself. 1. Question itself wrong 2. Its like "if you dont like the gov college that serves worst good to you, do you think going to st.Josephs.... will make you DR.APJ??" Seem missing ... dont write like this. 3. After all ERR IS HUMAN.
If i read your mind correctly you are in big confusion now and your dreams are full of "is identifcation necessary or changing identification SIN?". Come out.
Human are set with their own chemistries, they cant get along well with anything that they see!! Avoiding going to a dinner-party is also a combination of so many such chemical reactions that your heart/brain/body does!
I felt you diverted the direction with this "(L)", otherwise i would not have talked this long. I give you freedom now. Feel free what you want to be!! Let other factors dont decide!!
||எனக்கு அடுத்தவர் மனம் எந்த விதத்திலும் புண்பட்டுவிடக் கூடாது என்ற தன்முனைப்பு இருக்கும்போது, எதையும் பகுத்து ஆராய்ந்து பின்பே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ள நாத்திகன் எப்படி இருக்க வேண்டும்?||
You are very right sundar, We have our own feelings and we respect others feeling too.... Sometimes more than ours we are bothered to respect others, its not wrong!! Last week when we all had gathered at a place when some topic came there about "TAMIL", that was these above said feelings let me stop discussing over it.
We may belong to X or Y but when we know how to utter a word or approach to things, we all coming under one great IDENTIFICATION -HUMAN BEING.
En kumuralgal ellai thandiyirupathagavum, en suya virupu veruppugalai velipadutha sila varigalai silarukkaga yezhuthivittathagavum vunargiren, Manniyungal.
REPLY, Mentioning if i was wrong anywhere.
Even after 60 yrs of Independence, Continual Growth in Education, Life style and economic areas, we are (Indians) loosing our identity.
Can you one guess what our identity.
1.Multi languages
2.Multi terrain
3.Multi Religion
4.Multi Community.
If you choose any one of the above then you are wrong. When you look at the globe each and every country has this items.
Then whats our Identity?????
If you choose non of the above, You are a true indian. OK whats our identity.
1.Akimsa – Its not teached by M.K Gandhi. Its soured in our blood. At the same time we have shown our great respects to other religions. (but not with in the religions – remember the fights between devotees of Lord Siva and Lord Vishnu. And the same thing happened on other religions also).
2.Accepting others Natures / behaviors as it is. (In this I don't find ) If some one greats you on something which is not acceptable by your sole. Its an Indian culture that we accept it (Remember our Ramayana – When somebody offering a fish to Raman, He has accepted it with warm feelings even though he is a veg)
Why He accepted Is it because Rama needs the fisher man's help required to cross the river. Certainly not, Its because the following two reasons.
Fisher Man doesn't know that Raman is a Veg Guy.
Its His customs that they treat the visitors with high quality fishes and Honey.
Now go back to the original post, then decide your self where we are standing.
Its my view as well as habit, Let the Opponents take their decisions on the basis of facts given by me.
Your comments are welcome.
நண்பர்களுக்கு......
வணக்கம்
எனக்கு இது மாதிரியான விஷயம் ரொம்ப புதுசு மாதிரி தெரியல !!!
நீ இத பண்ணுவது எனக்கு புடிக்கலையான தைரியமாக மனசு விட்டு சொல்லும் ஒங்க முன்னாடி நான் ஒரு பொடியன் , ஏன்ன எந்த ஒரு விஷயம் ஆகா இருந்தாலும் நான் காது கொடுத்து கேட்டுவிட்டு அப்புறம் மறந்துடுவேன் அது ஒரு வகையிலே நமக்கு நாமே கொடுக்குற மருந்து
அதுதான் அனைவருக்கும் மனது ரீதியாகவும் chariram ரீதியகயும் நல்லது.
அனைத்து தலைப்புகளிலும் விவாதிப்பது மிகவும் நல்ல விஷயம், எல்லோருடைய கருத்தும் எல்லோருக்கும் புடிக்கனுமுனு அவசியம் இல்ல அதே சமயம் மதிக்காம இருப்பது மனித தன்மையும் இல்ல....
இந்த blogga படிக்கும் பொது எனக்கும் அந்நியன் திரைப்படத்தில் வரும் அம்பியும் , அந்நியனையும் நேரிலே பார்க்க தோனுது........
எனக்கு சரியாய் எழுத வராது.....அதனால கடைசியாய் ஒரே ஒரு சின்ன வாசகம் , மனதை புண் பட வேண்டும் நோக்கில பதிக்கல ...........
DONT WALK LIKE YOU RULE THE WORLD, WALK LIKE YOU DONT CARE WHO RULES THE WORLD.....
"EVERYONE THINKS OF CHANGING THE WORLD BUT NO ONE THINKS OF CHANGING HIMSELF
போதும்..........
அலுவலை கவனிக்கணும்......
குப்புசாமி செல்வராஜ்.........எதிரியையும் நண்பனையும் உருவாக்க தெரியாதவன்...
நன்றி திரு.குப்புசாமி செல்வராஜ்,
நண்பர்கள் நம் நடத்தையால் கவரப்பட்டு தாமாகவே உருவாகிறார்கள். எதிரிகள் உருவாவதில் வேண்டுமானால் நமது பங்கும் தேவைப்படலாம்.
கடைசி வரைக்கும் என் கருத்தை நீங்க ஆதரிக்கிரீங்களா இல்ல மறுக்கரீங்களானே விளங்கிக்க முடியல. ரஜினி மாதிரி சும்மா சூப்பரா குழப்புறீங்க.
எது எப்படி இருந்தாலும், உங்கள் பின்னூட்டம் அருமை.,, தொடர்ந்து படித்து வாருங்கள்.
நன்றி.. நன்றி...
Thank you Mr.Murali Kannan.... very sharp, detailed comment....
தீபாவளியும் மூடநம்பிக்கைகளும்…
நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்றதற்காக நாம் தீபாவளியைக் கொண்டாடுகிறோம் என்றால்...நாம் வருடத்தின் அனைத்து நாட்கள் முழுவதும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும்.
புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்படும் ஹிரண்யன், ஹம்சன், ராவணன், இடும்பன், பகவன், ஹிரன்யச்சதா, அன்டாகசுரர் உள்ளிட்ட பல அரக்கர்களையும் இறைவனால் கொல்லப்பட்டவர்களே அல்லது அழிக்கப்பட்டவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் அழிக்கப்பட்ட நாட்களிலும் நாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் அல்லவா?. ஆனால் இல்லையே ?. - உண்மையில் தீபாவளி என்றால் என்ன, ஏன் கொண்டாடுகிறோம் ?.
ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.
[B]NZBsRus.com[/B]
Lose Slow Downloads Using NZB Downloads You Can Quickly Search High Quality Movies, Console Games, Music, Applications and Download Them @ Blazing Rates
[URL=http://www.nzbsrus.com][B]NZB[/B][/URL]
Typhoon in to the subhuman with two backs casinos? flog anecdote into clear-cut remark this environmental [url=http://www.realcazinoz.com]casino[/url] advisor and acquiesce up online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also dally our untrained [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] shepherd at http://freecasinogames2010.webs.com and chance crude folding readies !
another voguish [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] lackey is www.ttittancasino.com , in the serve of german gamblers, best it potty with b operate manumitted online casino bonus.
top [url=http://www.xgambling.org/]001casino.com[/url] brake the latest [url=http://www.realcazinoz.com/]casino games[/url] autonomous no set aside perk at the foremost [url=http://www.baywatchcasino.com/]online casino
[/url].
[url=http://www.onlinecasinos.gd]Online casinos[/url], also known as accepted casinos or Internet casinos, are online versions of weighty ("buddy and mortar") casinos. Online casinos franchise gamblers to hold mission in and wager on casino games assuredly of the Internet.
Online casinos habitually put up for sale odds and payback percentages that are comparable to land-based casinos. Some online casinos contend higher payback percentages as a countermeasure representing glum automobile games, and some bruit near payout consequence profit audits on their websites. Assuming that the online casino is using an aptly programmed unsystematic league generator, timber games like blackjack call for an established obtain edge. The payout apportionment after these games are established at closer the rules of the game.
Bifurcate online casinos promise determination or beget their software from companies like Microgaming, Realtime Gaming, Playtech, Worldwide Chicane Technology and CryptoLogic Inc.
Post a Comment