பத்திரிகைச் செய்தி:
நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது. அவருக்கு ஒன்பது வயதில் ஒரு மகன்.
***********************************************************************************************
சீருடையும் சத்துணவும்
புத்தகமும் புதுப்பையும்
இவன் மனதைக் கவர்ந்தாலும்
பள்ளிக்குச் செல்ல மட்டும் விரும்பியதேயில்லை இவன்...
அரைகுறை ஆடையோடு
போஸ்டரில் அம்மா
வேடிக்கை பார்த்துவிட்டு
பள்ளி நண்பன் கேள்வி கேட்பான்...
குரலில் குதூகலம்
நடையில் உற்சாகமென
வெளிச்சப் பட்டாசாய்
அலைபாயும் இவனுக்கு
சுத்தமாய்ப் பிடிப்பதில்லை....
இரவின் கருமையும்,
கட்டிலும் மெத்தையும்,
கதவடைக்கும் சத்தமும்...
தொட்டாற் சுருங்கி போல
தொடப்பட்ட ஆமை போல
சுருங்கிப் போய் விடுவான்
"ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா..."
யாரேனும் சொல்லிவிட்டால்...
அஞ்சுக்கும் பத்துக்கும்
ஆள் பிடித்து வரும்போதும்
தனக்கான தாய்மடியில்
வேறொருவன் விழும்போதும்
கடவுளை திட்டித் தீர்ப்பான்...
அழகி கைது என்று
பேப்பரில் செய்தி வந்தால்
பதறிப் போகுமிவன்
தாய் நிழலில் ஒரு குடைக்காளான்...
--சுந்தர்
Tuesday, October 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
Test
கவிதை நல்லா இருக்கு.
\\
Raju K ராசு கந்தசாமி said...
கவிதை நல்லா இருக்கு.
\\
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி தல.
//சுத்தமாய்ப் பிடிப்பதில்லை....
இரவின் கருமையும்,
கட்டிலும் மெத்தையும்,
கதவடைக்கும் சத்தமும்... //
ஏன்? என்று கேட்டுவிட்டால் அவன் கொட்ட போகும் வார்த்தைகள் ஆயிரம் ஆயிரம்.. உணரவைத்த எழுத்தாளுமை!
//அஞ்சுக்கும் பத்துக்கும்
ஆள் பிடித்து வரும்போதும்
தனக்கான தாய்மடியில்
வேறொருவன் விழும்போதும்
கடவுளை திட்டித் தீர்ப்பான்... //
விளாசல்! உச்சி பிடிக்கும் வார்த்தைகள்! மிக அருமை!
நன்றி செந்தில்
I cant believe... Is this your sindanai??? better than the "keetru" one!!
@ Rajesh AR
Thanks Rajesh, believe me, its my sindanai only... :-)
Post a Comment