Friday, October 9, 2009

ஆறுதல்

கீற்று மின்னிதழில் பிரசுரம் ஆன, என்னுடைய கவிதை. நன்றி www.keetru.com


http://www.keetru.com/index.php/home/2009-10-06-12-15-36/2009-10-06-12-18-01/736-2009-10-09-00-20-49.html



வரதட்சணை கொடுமையின்னு
பொறந்த வீடு வந்து சேர்ந்தா
நான் பெத்த மூத்த மக...

காலேஜில் படிக்கும் கடைசி மகனுக்கு
பீஸ் கட்டப் பணமில்ல...
பாதில விட்டுப்போட்டு
காரேஜில் சேர்ந்துகிட்டான்...


வச்சிருந்த கால் பவுனும்
மளிகைக் கடை பாக்கின்னு
அடகுக் கடை போயிருச்சு...

கார்ப்பரேஷன் குழாயில்
குடிநீரே வர்ரதில்ல..
குடத்துக்கு ஒரு ரூபாய்
குடுத்து மாளவில்ல...

ஓலைக் குடிசைன்னாலும்
இருக்கிறது சொந்த வீடு
வாடகைப் பிரச்சனைன்னா
ரோட்டுக்கு வந்துருப்போம்...

இவ்வளவு பிடுங்கலிலும்
இருக்கவே இருக்குது...
இலவச தொலைக்காட்சி..!
காற்றாலை புண்ணியத்தில்
கரண்ட்டும் வந்துச்சுன்னா,
மறந்திருப்போம் கவலையெல்லாம்...

கரன்ட்டே இல்லன்னாலும்
சமாளிக்க வழி இருக்கு...
தெருமுக்கில் டாஸ்மாக்கு
பொண்டாட்டி மறைச்சு வச்ச
பணமிருக்கு குவாட்டர் வாங்க...

அழுத்தும் கஷ்டமெல்லாம்
ஆறுதல் சொல்லி சொல்லி
ஓடுது எங்க வாழ்க்கை...
எப்பத்தான் விடிவுகாலம்
அதுமட்டும் தெரியலங்க..

                          --சுந்தர்

5 comments:

Raju K ராசு கந்தசாமி said...

ருவாண்டாவில் டாஸ்மாக் எப்போது வந்தது?
But Jokes Apart,
நீங்கள் எழுதியது நிதர்சனம். கடந்த கால அனுபவங்களை நிகல்காலப்படுதியிருப்பதாக தோன்றுகிறது.

வணங்காமுடி...! said...

வைன் ஷாப் எல்லாம் டாஸ்மாக்-ஆ மாறுனதுக்கு அப்புறம், நான் இன்னும் அங்கே போகல... ஆனா அங்கெ ரெகுலர் கஸ்டமர்-ஆ இருக்கும் நிறைய பேர் வாழ்கை இப்படி தான் இருக்கு. அந்த பீலிங்-ல எழுதுனது தான் இந்தக் கவிதை.

வருகைக்கு நன்றி..

sathyakumar said...

வணங்காமுடி,

கீற்று மின்னிதழில் பிரசுரம் இக்கவிதை என் பார்வையில் ( உங்கள் தகுதிக்கு) .....சுமார் ரகம்தான்.
ஒரு கேவலமான-- வரதட்சணை கொடுமைஎய் எதிர்க்காத - மகனுக்கு பீஸ் கட்ட கூட உழைக்க விரும்பாத- பொண்டாட்டி சேமித்த காசில் சாராயம் என திரயும் அப்பனை ஆதரிக்கும் கவிதை...
\\\\\\
அழுத்தும் கஷ்டமெல்லாம்
ஆறுதல் சொல்லி சொல்லி
ஓடுது எங்க வாழ்க்கை...
எப்பத்தான் விடிவுகாலம்
அதுமட்டும் தெரியலங்க..\\\\\\\

"உழைத்தால்தான் தான் விடிவுகாலம்"........என சமுதாய சிந்தனையோடு கவிதை படைத்தால் சிறப்பாக இருக்கும்!


உங்களுக்கு என் ஆறுதல்....கீற்று மின்னிதழில் இக்கவிதை வந்ததற்கு மட்டுமே ......

மேலும் -மேலும் சமுதாய சிந்தனையோடு கவிதைகள் படைக்க என் முன் வாழ்த்துக்கள் ...

-உண்மையின் மைந்தன்-

sathyakumar said...

உங்கள் தகுதிக்கு enpathay -"ungal thiramikku" endru matri padikkavum.

வணங்காமுடி...! said...

\\இக்கவிதை என் பார்வையில் ( உங்கள் திறமைக்கு) .....சுமார் ரகம்தான்..\\

அட... இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது

\\-மேலும் சமுதாய சிந்தனையோடு கவிதைகள் படைக்க\\

வாழ்த்துக்கு நன்றி சத்யா... கண்டிப்பாக முயல்கிறேன்...