Monday, June 8, 2009

வணங்காமுடி - பெயர்க் காரணம்


எத்தனையோ கவித்துவமான பெயர்கள் இருக்கும்போது ஏன் இப்படி ஒரு பெயர்? அது என்ன முடிமட்டும் என்று வலைப்பூ முகவரி? என்று செல் பேசியில் அழைத்தும், மெயில் அனுப்பிக் குவித்தும், நேரிலும் என்னைக் கேட்ட கோடிக்கணக்கான (!?) மக்களுக்கு பதில் சொல்லவே இந்தப் பதிவு. (கோடிக்கணக்குல இல்ல, ஆனா லட்சக்கணக்கான அதாவது ஒரு ஆயிரக் கணக்கான, பத்து இருவது - சரிங்க உண்மையச் சொல்லிர்றேன், ஒரே ஒரு ஆள் தான் கேட்டார்)


நான் இங்கே ருவாண்டாவுக்கு வந்த புதிதில், ஒரு சனிக் கிமை இரவு விசிஆரில் "அலாவுதீன்" என்ற அற்புதக் காவியத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தோம். புதிதாக வந்திருந்தாலும், இங்கு இருந்த எல்லோரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்து அவர்களின் வயிற்றெரிச்சலை நான் கொட்டிக் கொண்டிருந்த நேரம் அது... நம்ம சகாக்கள் எல்லாம் கலந்து பேசி என்னை கவுக்க சமயம் பாத்துகிட்டே இருந்திருப்பாங்க போல. இந்தக் கொலவெறி தெரியாம சிங்கம் படத்துல மூழ்கி இருந்துச்சு. (யாரு அந்த அசிங்கம்னு கேக்கக் கூடாது, தெரியும்ல! ).


அப்பப் பாத்து படத்துல ஒரு அற்புதமான சீன். சனங்க எல்லாம் ரெண்டாவது ஆட்டம் சினிமா பாத்துட்டு வந்துக்கிட்டு இருக்கும், வழியில ஒரு குழ்ந்தை அழுவுற குரல் கேட்டுப் பாத்தா, அட நம்ம பிரபுதேவா, குழந்தையா கையை காலை ஆட்டி குப்பைத் தொட்டிக்குள்ள டான்ஸ் ஆடிக்கிட்டு இருப்பாரு. குழந்தய தூக்கி ஒரு பெருசு டயலாக் பேசிட்டு, சரி இந்தக் குழந்தைக்கு என்ன பேரு வக்கலாம்னு கேக்கும் போது, பசி சத்யா படக்குன்னு சொல்லுவாங்க "வணங்காமுடி" னு. இப்படி ஒரு டப்பா படத்தை வாங்கிட்டு வந்து உசுர வாங்குரானேனு வெந்து வெக்ஸ் ஆயி நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்த நம்ம மக்கள் எல்லாம் இந்த பேரை கேட்டவுடன, அப்படியே ஆகாசத்துல பறந்தாங்க. உடனே நமக்கு பேர் சூட்டு விழா இனிமையா நடந்து முடிஞ்சு போச்சு.


அவங்களை சொல்லி குத்தம் இல்லை. நமக்கு முடி அப்படி. கம்பி மாதிரி செம ஸ்ட்ராங். கரண்டு கம்பிக்கு பதிலா என் முடிய யூஸ் பண்ணா கவர்மெண்டுக்கு செலவும் மிச்சம், கடத்தலும் ஜாஸ்தி நடக்கும் (கரண்டை சொன்னேன்). காலைல சீவிட்டு ஆபிஸ் கிளம்புனா, ராத்திரி வந்து படுக்குற வரைக்கும், வால்டர் வெற்றிவேல் சத்தியராஜ் மாதிரியே வெறைப்பா (இங்கயும் முடியப்பத்திதாம்பா சொல்றேன்) நிக்கும். வணங்காமுடி-னு பேரு வச்சிட்டு கொஞ்ச நாள் கூப்பிட்டு கூப்பிட்டு குஷியாகிட்டு நம்ம மக்கள் மறந்துட்டாய்ங்க. ஆனா பாசக் கார பயபுள்ள நான் மறக்கல. அதான் நம்ம வலைப்பூவுக்கு இந்தப் பேரு (இப்ப சந்தோசமா ஐயா)


அதென்ன முடிமட்டும்? அதாவது.... என்னோட முடிமட்டும் தான் வணங்காமுடி.. என்னோட கேரக்டர் அப்படி இல்லைன்னு சொல்லத்தான் இந்த அட்ரஸ்... சரியா... இனிமேலாவது நிம்மதியா தூக்கம் வரும்னு நம்புறேன்... (இனிமே கேப்பியா, கேப்பியா...)


"வணங்காமுடி - என்ன ஒரு கம்பீரமான பெயர்" என்று பாராட்டிய அண்ணன் எம்.பி.உதயசூரியன் அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். (எம்.பி.உதயசூரியன் - சுடச்சுட சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர்.....சூரியனுக்கே டார்ச்சா? நாம லிங்க் குடுத்து தான் தெரியனும்னு இல்ல.... இந்த லிங்க், இது வரைக்கும் தெரியாதவங்களுக்கு.... )...


இந்தப் பேருல நம்ம நடிகர் திலகம் நடிச்ச ஒரு படம் இருக்குன்னு தெரியும். அடுத்த முறை இந்தியா போகும் போது சிடி வாங்கணும்.


(டிஸ்கி: மேல உள்ள ரஜினி படத்துக்கும், இந்தப் பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்புறம் எதுக்கு இந்த படம்னு கேக்குறீங்களா.... தெரியுமே, கேக்க மாட்டிங்களே .....கேட்டா.... மறுபடியும் அதுக்கு ஒரு பதிவு போட்டுட மாட்டேன்?)

10 comments:

Raju said...

:)))

Raju said...

அய்ய்யோ..வெவரம் தெரியாத புள்ளையா இருக்கீங்களே தல..!
இதெல்லாம் அம்பதாவது பதிவுலதான் சொல்லணும்.

கடைக்குட்டி said...

அட யாருப்பா அது கேட்டது ????

வணங்காமுடி...! said...

\\ டக்ளஸ்....... said...
அய்ய்யோ..வெவரம் தெரியாத புள்ளையா இருக்கீங்களே தல..!
இதெல்லாம் அம்பதாவது பதிவுலதான் சொல்லணும் \\

வாங்க தலைவா, இந்த விஷயம் முன்னாடியே தெரியாமப் போச்சே.....அது சரி.. நாம தான் இன்னும் குழந்தையாவே வாழ்ந்துகிட்டு இருக்கோம்ல. (ஒரு விளம்பரம்....ஹி ஹி ஹி...!)

பின்னூட்டங்களுக்கு நன்றி டக்ளஸ்....

\\ கடைக்குட்டி said...
அட யாருப்பா அது கேட்டது ????
\\

கேட்டவர் பேரைச் சொன்னா, பதிவைப் படிக்கறவங்க கோவம் எல்லாம் அவர் மேல திரும்புற அபாயம் இருப்பதால், சொல்ல முடியலைங்க... (எப்படிலாம் சப்பைக் கட்டு கட்ட வேண்டி இருக்குது... உஸ்ஸ்ஸ்... யப்பா.... முடியல...)

நன்றி கடைக்குட்டி...

வணங்காமுடி...! said...

\\ அனுஜன்யா said...
:))
\\

நன்றி

Cliffnabird said...

அட பாவி மக்கா இவ்வவளவு நேரம் கை ய புடிச்சி வச்சிருகீன்களே டா.... விடுங்க டா ... விடுங்க டா... விடுங்க டா... லூசு பய பில்லைவோல...

அட சத்தியமா கமெண்ட் போடா தான் பா கைய விட சொன்னேன்.... ;-))

பின்ன்றிங்கனோ......

வணங்காமுடி...! said...

\\ Cliffnabird said...
அட சத்தியமா கமெண்ட் போடா தான் பா கைய விட சொன்னேன்.... ;-))
\\

நம்பிட்டேன்...

நன்றி செந்தில்

INFOSHAAN said...

சிந்தனைகளை எழுத்துகள் மூலம் ரசிக்கும்படி செய்வது ஒரு அரிதான கலை.... நூலின் மேல் நடப்பது மாதிரி கொஞ்சம் தவறினாலும் படிப்பவர்களுக்கு போர் அடித்துவிடும் ...அந்த வகையில்

YOUR WAY OF PRESENTATION IS GOO000000DDDDDD ...

வணங்காமுடி...! said...

நன்றி ஷங்கர்

sai said...

TITLE சும்மா சூடு பரக்க இருக்கு மாமு, கலக்கற சுந்தர்