Sunday, June 14, 2009

வ(எ)ண்ணச்சிதறல்கள்


"பசங்க" ளைப் பார்த்தேன். அட்டகாசம் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டுப் போய் விட முடியாது. (அய்யய்யோ, இன்னொரு பதிவா- னு கேக்காதீங்க ப்ளீஸ்....என்னா கொல வெறி?). படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், ஆரம்பத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்று அறிந்ததும் நெகிழ்ந்தேன். திரைத்துறை என்று மட்டும் இல்லாமல், எல்லா துறைகளிலும் இது போன்ற திறமைசாலிகள் அடிமட்டத்தில் இருந்து முன்னுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம். மன உணர்வுகளுடன் விளையாடும் ஒரு நல்ல படத்தை, முடிந்த வரை குறைகளின்றி கொடுத்ததற்கு இயக்குனர் பாண்டிராஜ் - க்கு நன்றி சொல்லலாம்.

*************************************************************************************************

கிரிக்கெட் உலக பிரபலம் பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ் லாராவே தான்) சென்ற வாரம் ருவாண்டா வந்திருந்தார். செக்யுரிட்டி கெடுபிடிகளால் நேரில் பார்க்க முடியாவிட்டாலும், தெரிந்தவர்கள், லாராவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் பேப்பரிலும் அவர்களின் கேமராவிலும் பார்த்து குஷியானேன். லாரா வந்து இறங்கியவுடன் அவரை இங்குள்ள "Genocide Memorial" -க்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சென்று வந்ததும் அவர் சொன்ன விஷயம் ஹைலைட் - இங்கே ஏப்ரல் 1994 - ல், இனப் படுகொலை நடந்து கொண்டிருந்த போது, அவர் "பர்ஸ்ட் க்ளாஸ் கிரிக்கெட்டில்" அதிக பட்ச ஹை ஸ்கோரான 501 ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தாராம். "உலகம் கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இங்கே பேரழிவு நடந்து கொண்டிருந்திருக்கிறது" என்று வருத்தப் பட்டிருக்கிறார். இலங்கையில் நடக்கும் கொடுமைக்கும், இங்கு நடந்த படுகொலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள். தனிப் பதிவாகப் போட உத்தேசம்.

************************************************************************************************************

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் எளிமையான பயன்பாட்டுக்கு பெயர் பெற்றது அனைவருக்கும் தெரியும். பலருக்கும் தெரியாத ஒரு சின்ன விஷயம். CON என்ற பெயரில் உங்களால் ஒரு போல்டரை கிரியேட் செய்யவே முடியாது. ஒரு New Folder கிரியேட் செய்து CON என்று Rename செய்யவும் முடியாது. முயன்று பாருங்கள். மைக்ரோ சாப்ட் எவ்வளவு முயன்றும் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

**********************************************************************************************************

எல்.கே.ஜி படிக்கும் என் பையன் (நாலரை வயது) என்னைக் கேட்டான். "இந்த ஊருல எல்லாரும் ஏன் கருப்பா, அசிங்கமாவே இருக்காங்க?" பூமத்திய ரேகை, நில அமைப்பு, இன வித்தியாசம் என்றெல்லாம் சொல்லி அவனுக்குப் புரிய வைக்க முடியாதென்பதால் இப்போதைக்கு "கருப்பா இருந்தாலும் அவுங்க எல்லாம் good boys, good girls தாண்டா" என்று சொல்லி வைத்திருக்கிறேன். கருப்பு என்பது அசிங்கம் என்ற விஷ விதை இத்தனை சின்ன வயதில் எப்படி, யாரால் ஊன்றப்பட்டதென்று தெரியவில்லை. வளர வளர, இந்த எண்ணம் மாறும் என நம்புகிறேன்.
********************************************************************************************************

விழுங்கி விட்ட
புகையை
சில கணங்கள்
நிறுத்திவைத்து
சுமந்து நின்றேன்...
என்னைக் கடந்து கொண்டிருந்தாள்
வயிற்றுள்
குழந்தையோடு

***************************************************************************************

4 comments:

Raju said...

உங்க பையனுக்கு கருப்புதான் எஅனக்கு பிடிச்ச கலரு பாட்டை போட்டுக் காட்டுங்க பாஸு...!

ச.முத்துவேல் said...

நன்றி நண்பரே.

வணங்காமுடி...! said...

\
டக்ளஸ்....... said...
உங்க பையனுக்கு கருப்புதான் எஅனக்கு பிடிச்ச கலரு பாட்டை போட்டுக் காட்டுங்க பாஸு...!
\\

வாங்க பாஸு, ஐடியா என்னமோ நல்லா தான் இருக்கு, ஆனா என் பையன் விஜய் பாட்டைத் தவிர வேற எதையும் கேக்க மாட்டிங்கரானே... .:-(((

நன்றி டக்ளஸ்

\\
ச.முத்துவேல் said...
நன்றி நண்பரே.
\\

நாந்தாங்க உங்களுக்கு நன்றி சொல்லணும்.

INFOSHAAN said...

குழந்தைகள் மனது புது HARD DISK மாதிரி ,,,, அதில் விண்டோஸ் INSTALL செய்வதும் LINUX INSTALL செய்வதும் நம்மை பொறுத்து .... நாம் குழந்தைகளை கண்காணிப்பதை போல , ஆயிரம் மடங்கு அவர்கள் நம்மை கண்காணிக்கிறார்கள் என்பதை ஏனோ சில சமயங்களில் மறந்து விடுகிறோம் ,,, நானே விஷ்வாவின் சில பேச்சுகளுக்கு காரணமாய் இருந்திருக்கிறேன் ...
சில விஷயங்கள் நம்மை அறியாமல் தெரியப்படுத்தப் பட்டு விடுகிறது ....