Monday, June 8, 2009

அலுவலகத்தின் ஒரு பகல்



வெயிலின் கடுமை
ஏறிக் கொண்டிருக்கிறது வெளியே...


தொலைந்து போன பனியன் கிடைத்து விட்டதென
தொலை பேசிச் சொல்கிறாள் மனைவி...


மதிய உணவு இடைவேளை வர
இன்னும் எத்தனை நேரம் பாக்கி...!
கணக்கிட்டுப் பார்க்கிறது பசித்த வயிறு....


டெஸ்க்டாப் பேக்கிரவுண்டில்
த்ரிஷா, அசினுக்குப் பின் குடியேறும் தமன்னா...


"ஈகை இம்சை" எனத் தலைப்பிட்டு
அடுத்த பதிவுக்காய் தட்டச்சிடும் விரல்கள்....!

வழக்கம் போல் வாட்ச்மேனால் துரத்தப்படும்
வாசல் பிச்சைக்காரியின் குரலை
சாப்பிட்டு விடுகிறது ஏஸியின் உறுமல்.....!



15 comments:

கடைக்குட்டி said...

எல்லாத்தையும் கவனிக்குறீங்க போல...

வணங்காமுடி...! said...

\\ கடைக்குட்டி said...
எல்லாத்தையும் கவனிக்குறீங்க போல...
\\

தூங்குனா கூட கண்ணை மூடாம, திறந்து வச்சிக்கிட்டே தூங்குவோம்ல...

நன்றி கடைக்குட்டி...

Raju said...

அட. கவிதையெல்லாம் எழுதுவீங்களா நீங்க.

வணங்காமுடி...! said...

\\ டக்ளஸ்....... said...
அட. கவிதையெல்லாம் எழுதுவீங்களா நீங்க.
\\

அய்யய்யோ..... என்னங்ணா....என்னைப் போயி இப்படி கேட்டுப்போட்டீங் ... சும்மா ஒரு முயற்சி தானுங்கண்ணோவ்... சரியா வரலைன்னா கிரகத்தை தூக்கிக் கடாசிப் போடுவோம். நீங்க மனசை விட்டுராதீங்....

வருகைக்கு நன்றி டக்ளஸ்........

Cliffnabird said...

நல்ல இருக்கு சுந்தர்,

//வழக்கம் போல் வாட்ச்மேனால் துரத்தப்படும்
வாசல் பிச்சைக்காரியின் குரலை
சாப்பிட்டு விடுகிறது ஏஸியின் உறுமல்.....!
//

ஹைக்கூ வும் முயற்சி செய்யலாமே....

வணங்காமுடி...! said...

கவிதை என்ற பெயரில் நான் எழுதியிருக்கும் (?) அத்தனை வரிகளையும், ஒரு நல்ல ஹைக்கூ வெளிப்படுத்திவிடும் என்று புரிய வைத்ததற்கு நன்றி செந்தில்.

Prabhu said...

கவிதை அருமை, உங்களுக்குள் இத்துணை திறமை.

வணங்காமுடி...! said...

நன்றி பிரபு

Anonymous said...

கவிதை அருமை. கவிதை எழுத முயற்சி....என்பதல்லாம் பொய். சுந்தர் அவர்களுக்கு கவிதை நன்றாக எழுத தெரியும். என்று எனக்கு நன்றாக தெரியும்.
(எட்டு வருடங்களுக்கு முன்பே சுந்தரின் படைப்புகளை திருட்டுதனமாக வாசித்தவன் என்பதால்...) தொடருந்து கதைகள் எழுதினாலும் நடுவாக சில கவிதைகள் எழுதுங்கள்...

வணங்காமுடி...! said...

பின்னூட்டமிட்ட அனானி யார்னு தெரியலியே

பாராட்டுக்கு நன்றி அனானி.

INFOSHAAN said...

கவிதை அருமை !!!!!!!!
இயல்பும் எதார்த்தமும் பொதிந்தும் புதைந்தும் உள்ளது......
ஹைக்கூ எழுதலாம் ....
எனக்கு ரொம்ப பிடிக்கும் ....(படிக்க மட்டும் , எழுதெல்லாம் வராது)

வணங்காமுடி...! said...

நன்றி ஷங்கர்

saran said...

அந்த அனாமி நான் தான் சுந்தர் அவர்களே...............

சரண்.

வணங்காமுடி...! said...

ஒ அந்த அனானி நீங்க தானா? எட்டு வருஷம் முன்னாடி நான் எழுதுன கவிதை (?) எதையும் நான் இங்க வெளியிடறதா இல்ல. ஏன்னா அவ்வளவு உலகத் தரமா இருக்கும் அந்தக் கவிதைகள் :-)))

நன்றி சரண்

sai said...

ஒரு எதார்த்தமான கவிதை சற்று வித்தியாசமாக சொன்னிர்கள், பாராட்டுகள்.