உலகத் திரைப்படங்களை
அலசிக் காயப்போடும் எனக்கு
உள்ளூர் விஷயங்கள்
என்றுமே தெரிந்ததில்லை
பக்கத்து வீட்டின்
மாமியார் மருமகள் சண்டை முதல்
செட்டியார் கடையின்
அநியாய விலைவாசி வரை
விடாமல் ஒலிபரப்புவாய் நீ....
பாகிஸ்தான் கலவரம்
பங்குச் சந்தை நிலவரம்
லேட்டஸ்ட் விஜய் படம்
விவாதம் எதுவெனினும்
பட்டென்று பதில் சொல்லும்
கருத்து கந்தசாமி நான்...
ஆனாலும்
குளித்து முடித்து வந்தால்
ஜட்டி கூட நீதான் எடுத்து தர வேண்டும்...
CBSE பாடத் திட்டம்
நிறையா குறையா
விமர்சிக்கத் தெரிந்தவன்
விஷ்வாவின் வீட்டுப் பாடத்தில்
ஒருபோதும் உதவியதில்லை.....
எல்லாம் தெரிந்த
ஏகாம்பரம் எனக்கு
ஒரு விஷயம் மட்டும்
இன்று வரை புரியவில்லை.....
வேட்டியில் படுகின்ற
வாழைக்காய் கறை முதலாய்
வீட்டு பட்ஜெட்டில்
விழுகின்ற துண்டு வரை
முகத்தின் புன்னகை
மாறாமல் சரி செய்வாய்........
அவ்வப்போது
ஏறுகின்ற (ஏத்துகின்ற?)
தலைக்கிறுக்கில்
"ரசனை இல்லாதவள்"
"அறிவிலிகளின் முகவரி"
இன்னபிற இன்னபிறவென்று
பேசிக் கொண்டே போகையில்
சற்றும் வலிக்காமல்
முகத்தை சுளிக்காமல்
சிரிப்பினால் கடந்திடுவாய்.....
எனக்காக நீ செய்யும் சமரசங்கள் ஏராளம்.......
இன்னமும் புரியவில்லை எனக்கு.....
அதுசரி.....
காகிதப் பூக்களுக்கு எங்கே புரியும்....
நிஜப் பூவின் நறுமணமும்
முள்ளிடை வாழ
அது கைக்கொள்ளும் சாமர்த்தியமும்.......
-----சுந்தர்
10 comments:
கவிதை ரொம்ப நல்லா இருக்கு.... அனுபவம் பேசுது... இல்ல?
தொடரட்டும் இந்த முயற்சி.... அதாவது இப்படி நெசத்தை எல்லாம் கவிதை ஆக்குற முயற்சி... :-) :-)
இப்படிக்கு
திருமதி.வணங்காமுடி
நல்ல கவிதை, நல்ல கருத்து, உலகத்தில் அனைவரும் தனது அங்கிகாரதுக்காகத்தான் போராடுகிறார்கள். திருமதி.வணங்காமுடிக்கு நல்ல ஒரு அங்கிகாரம்.
எப்டியோ ice வச்சாச்சு. இன்னும் ஒரு வருசத்துக்கு சண்டை இல்லாம போகும். நம்ம Indian team ல ஆடிக்கு ஒரு வாட்டி அம்மாவசைக்கு ஒரு வாட்டி 100௦ அடிச்சுட்டு டீம் ல இருக்கற மாத்ரி :-)
கவிதை சூப்பர்.......
தொடரட்டும் கவிதை முயற்சி..........................
அசோக் விமர்சனம் அருமை.
சரண்.G
கவிதைக்கு பேசாம மனசாட்சி பேசுகிறேன்னு வச்சுருக்கலாம்
ரொம்ப சூப்பர் ........... உங்க கவிதைய படிச்ச பிறகுதான் நாமளும்
கவிதை எழுதலாம் அப்படிங்கற தைரியமே எனக்கு வந்துருக்குன்னா பார்த்துங்கங்க ......... உங்க கவித்திறன் எனக்கு ஒரு கிரியா ஊக்கியா அமைசிருக்குன்னா அதுல எந்த சந்தேகமும் இல்ல...
இயல்பா கவிதை எழுதறது ரொம்ப கஷ்டம் ஆனா அந்த திறமை உங்ககிட்ட இருக்கு வணங்காமுடி.....
Thank you Madhavi
Thank you Ashok
Thank you Saran
Thank you Shankar
சுந்தர கவிதை சுந்தர் ! நகைச்சுவை சாரம் தெளித்து சொல்லிவிட்ட சீரியஸ் matters! Sorry சொல்வதற்கு நாம் கைகொள்ளும் வித்தைகள் எத்தனை எத்தனையோ ... அதில் இதுவும் ஒன்று ! ;-) இதைபோலவே இன்னும் (அ)நியாயங்களை அப்படியே தொடர்ந்துவிட்டு ... மூன்று மாசம் கழித்து ஒரு கவிதை எழுதிவிடலாம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு கவிதை hihihi ;-)
//உலகத் திரைப்படங்களை
அலசிக் காயப்போடும் எனக்கு
உள்ளூர் விஷயங்கள்
என்றுமே தெரிந்ததில்லை
பக்கத்து வீட்டின்
மாமியார் மருமகள் சண்டை முதல்
செட்டியார் கடையின்
அநியாய விலைவாசி வரை
விடாமல் ஒலிபரப்புவாய் நீ....//
"ஒலிபரப்புவாய்" நல்ல வார்த்தை விளையாட்டு ... எப்டயோ RADIO நு சொல்லியாச்சு ... hihihi ;-) நாராயண
நாராயண ... ;-)
//பாகிஸ்தான் கலவரம்
பங்குச் சந்தை நிலவரம்
லேட்டஸ்ட் விஜய் படம்
விவாதம் எதுவெனினும்
பட்டென்று பதில் சொல்லும் //
வாசிக்கையில் ம் ம் என்று முடிவது அருமை ...
CBSE பாடத் திட்டம்
நிறையா குறையா
விமர்சிக்கத் தெரிந்தவன்
விஷ்வாவின் வீட்டுப் பாடத்தில்
ஒருபோதும் உதவியதில்லை.....
விஷ்வா maths ரொம்ப கஷ்டமா இருக்குன்னு எண்ட புலம்பினத ...என்னமா சமளிசிங்க தல ... WOW WOW ;-) ! கவிதைக்கு பொய் அழகு!
//எல்லாம் தெரிந்த
ஏகாம்பரம் எனக்கு//
நல்லாருக்கு... சூப்பர்..
வே ட் டியில் படுகின்ற
வா ழை க்காய் கறை முதலாய்
வீ ட் டு பட்ஜெட்டில்
வி ழு கின்ற துண்டு வரை
மு கத்தின் புன்னகை
மா றாமல் சரி செய்வாய்........
எதுகை மோனை அற்புதம் ..
//அவ்வப்போது
ஏறுகின்ற (ஏத்துகின்ற?)
தலைக்கிறுக்கில்
"ரசனை இல்லாதவள்"
"அறிவிலிகளின் முகவரி"
இன்னபிற இன்னபிறவென்று
பேசிக் கொண்டே போகையில்
சற்றும் வலிக்காமல்
முகத்தை சுளிக்காமல்
சிரிப்பினால் கடந்திடுவாய்.....//
இயல்பான வரிகள் ... நன்றாக உள்ளது ...
//
எல்லாம் தெரிந்த
ஏகாம்பரம் எனக்கு
ஒரு விஷயம் மட்டும்
இன்று வரை புரியவில்லை.....//
இந்த வரிகள், கீழே வரும் வரிகளுக்கு முன் இருந்திருந்தால் இன்னும் இயல்பாக இருக்கும் இல்ல?? "இன்னமும் புரியவில்லை எனக்கு....." "ஒரு விஷயம் மட்டும்
இன்று வரை புரியவில்லை...." திரும்ப திரும்ப வந்து குழப்புகிறது .... "ஒரு விஷயம் மட்டும்
இன்று வரை புரியவில்லை.." இதற்கு பிறகு ஏதேனும் காரணம் கூறபட்டிருப்பின் நன்றாக இருந்திருக்கும் ... தொடரும் வரிகள் சற்றே வேறு திசையில சென்று பிறகு திரும்பவும் ""இன்னமும் புரியவில்லை எனக்கு....."" என்று வருவது சற்றே வித்தியாசமாக படுகிறது ..
//அதுசரி.....
காகிதப் பூக்களுக்கு எங்கே புரியும்....
நிஜப் பூவின் நறுமணமும்
முள்ளிடை வாழ
அது கைக்கொள்ளும் சாமர்த்தியமும்.......//
அருமையான varigal "முள்ளிடை வாழ
அது 'கைகொள்ளும்' சாமர்த்தியமும்."
ரொம்ப நல்லா இருக்கு... உங்கள் கவிதைகளுக்கு தொடரும்.. போடுங்க!!
- மலைமுகடு சிறுபறவை
விரிவான அலசலுக்கு மிக்க நன்றி "மலை முகடு சிறு பறவை"
உங்க பின்னூட்டத்தை பாத்தாலே புரியுது நீங்களும் எல்லாத்தையும் அலசிக் காயபோடுற ஆளுன்னு.. நீங்களும் ஒரு கவிதைய இப்பவே எழுதி வச்சா கல்யாணத்துக்கு அப்புறம் யூஸ் ஆவும்,,,, :-)
கவிதை அற்புதம் - தொடரட்டும் - என்று குறுஞ்செய்திக்கு பராட்டுக்கு பின் இப்போது என் விமர்சனம் .
முடிமட்டுமல்ல முடிவும் அமர்களம்.....திருமதி.வணங்காமுடிக்கு( காதலித்து கைபிடித்தாலும்)- என் பாராட்டுகள்......
மலைமுகடு சிறுபறவை- அருமை விமர்சனம்....என் பாராட்டுகள்.
இப்படிக்கு,
உண்மையின் மைந்தன்
கவிதை அற்புதம் - தொடரட்டும் - என்று குறுஞ்செய்திக்கு பராட்டுக்கு பின் இப்போது விமர்சனம்.......
முடிமட்டுமல்ல முடிவும் அமர்களம்.....திருமதி.வணங்காமுடிக்கு( காதலித்து கைபிடித்தாலும்)- பாராட்டுகள்......
மலைமுகடு சிறுபறவை- அருமை விமர்சனம்....பாராட்டுகள்.
-உண்மையின் மைந்தன்
உண்மை மைந்தனின் பாராட்டு உண்மையிலேயே உரம் தருவதாக உள்ளது. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சத்யா.....
Post a Comment