Sunday, June 11, 2023

வாழ்க்கை

 இருபதாண்டு காலம் 

இருளில் இருந்தேன்...

கண்ணைக் கூசும் 

மின்னலாய் 

நீ வந்தாய்...


யதார்த்தக் குழியில் 

கால் படாமல் 

வெளிச்சக் கதிர் பிடித்துப் 

பறக்கக் கற்றுத்தந்தாய்...


இன்று காதலை விற்று 

காலை உணவுக்கு 

ரொட்டி வாங்கிக் 

கொண்டிருக்கிறேன்.. 


காதலுக்குத் தான்  கண் இல்லை 

வாழ்வுக்கு வயிறுகள் பலப்பல... 


- சுந்தர் 

11.06.23 | 11:37 AM 


புதிர்

 அறுபது கிலோ எடை 

என்கிறார்கள் என்னை...

என் எடை முழுதும் 

நீயே  இருக்கையில் 

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து 

உற்றறிவதெல்லாம் எங்கே நிகழ்கிறது? 


- சுந்தர் 

11.06.23 | 7:10 AM 

வளர்சிதை

 நரை கூடிக் கிழப்பருவம் எய்தியும் 

வாரம் தோறும் வளர்கிறது 

காதல் 


- சுந்தர் 

11.06.23 | 7:00 AM

பிரிவு

 


நீ என்னோடு இல்லாத 

ஒவ்வொரு கணமும் 

எடை கூடிக் கொண்டே போகிறது 


சுமக்க முடியாத கனத்துடன் 

மூச்சடைக்க விழி பிதுங்கித் 

தவிக்கையில்... 


பாரம் நகர்த்தி, கை தூக்கி 

தலை கோதி ஆசுவாசம் கொடுக்கிறது 

உன் நினைவைச் சுமக்கும் 

புகைப்படம்


- சுந்தர் 

10.06.23

11:40 AM

Tuesday, March 4, 2014

சுஜாதா


16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்களை விழுங்கிக் கடத்தல்! கொழும்பில் இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த அகமது மொய்தீன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். கடத்தப்பட்ட ரத்தினக்கற்களின் எடை 475 கிராம். 27 ஆணுறைகளில் பொட்டலம் கட்டி அவற்றை அவர் விழுங்கியுள்ளார். விமான நிலையத்தில் இறங்கிய காயல்பட்டினத்தைச் சேர்ந்த மொய்தீன் மீது சந்தேகம் ஏற்பட்டது. எக்ஸ்ரே பரிசோதனையில் ரத்தினக் கற்கள் வயிற்றில் உள்ளது தெரிய வந்தது.
மொய்தீன் தன் பெயரை நூர் முகமது ஜமால் என்று பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விநோதமான சம்பவத்தில் எனக்குச் சில ஆதாரச் சந்தேகங்கள்.
1. எக்ஸ்ரே பரிசோதனைக்குப் பின் எப்படி அந்தக் கற்கள் நீக்கப்பட்டன?
2. ஆணுறைகள் வாங்கும்போது கடைக்காரர், அவரிடம் என்ன வினவியிருப்பார்?
''இருபத்தேழுங்களா?''
''ஆமாங்க...''
''ஒருத்தருக்கா...?''
''ஆமாங்க!''
''கை குடுங்க... என்னால ரெண்டு சமாளிக்க முடியலை.''
                                                                                                                 Courtesy : vikatan.com 

We miss you...!!!