விடுமுறை தினமொன்றில்
—————————————————————————————
விடுமுறை தினமொன்றில்
சற்று தாமதமாக
கண்விழித்து
காபி குடித்து
செய்தித்தாளை மெல்ல மேய்ந்து
ஓய்வாக நகம் வெட்டியபடியே
அன்றைய சிறப்பு நிகழ்ச்சிகளை
தொலைக்காட்சியில்
பார்க்க ஆரம்பித்தோம்
நடிகையொருத்தியின் பேட்டி
நடிகரொருவரின் பாட்டு
அடுத்து வெளிவரவிருக்கும்
அமர்க்களமான புதுப்பட
முன்னோட்டம் பிறகு
பட்டிமன்றம் கொறிக்க
கொஞ்சம் சிப்ஸ்
இன்னொரு குவளை
தேனீர் இடையில்
மதியம் வைக்கவேண்டிய
மட்டன் குழம்பு பற்றி
சில விவாதம்
பள்ளி முடித்து வரும்
மகன் சேனல் மாற்றி
கொஞ்சம் பாட்டு
உண்ட களைப்பில் சிறிது
உறக்கம் மாலை
எழுந்து தேனீர் கூட சமோசா
இந்தியத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக பார்த்தல்
இரவு தோசையா? இடியாப்பமா?
நீண்ட சர்ச்சை வாக்கெடுப்பு
முடிவில் இட்லிக்கு சம்மதித்து
புதினா சட்னிக்கு தலையாட்டி
கொஞ்சம் இணையத்தில் மேய்ந்து
மின்னஞ்சல்கள் அனுப்பி
பிளாக்கில் திட்டியோ
கவிதை எழுதியோ முடிக்கையில்
கதவு தட்டும் மகன்
இன்னைக்கு காத்தால
எதுக்குமா ஸ்கூல்ல
முட்டாய் கொடுத்தாங்க?
ஏதேதோ சொல்லியபடி
உறங்கியும் போவோம்
Wednesday, September 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பழம்பெருமைகள் பேசியது போதும் தமிழனே ....
பத்து கோடி மக்கள் கொண்டும் - உலகில்
பத்து கோடி மக்கள் கொண்டும்.....
பக்கத்து நாட்டு படுகொலையில் ...
பக்கத்து நாட்டு இனப்படுகொலையில்
பத்துப் பேரைக் கூட
பாதுகாக்க துப்பில்லை நமக்கு!
தமிழன் என்று சொல்லடா- தலை நிமிர்ந்து நில்லடா-
பழம்பெருமைகள் பேசியது போதும் தமிழனே-- இனி
தமிழன் என்று சொல் - தலை குனிந்தே செல் !
ஆயுதம் அளிப்பு - எல்லா ஊரும் உனக்கெதிராய் !
தீர்மானம் ஏற்பு - எல்லா மக்களின்சார்பில் ஐ-நா உனக்கெதிராய்....
பெருந்தன்மையோடு - இன்னும் நீ மட்டுமே
பீற்றிகொள்கிறாய் !!
"யாதும் ஊரே - யாவரும் கேளீர்" என்று
பழம்பெருமைகள் பேசியது போதும் தமிழனே-
நாற்புறமும் முள்வேலி அடைத்து
உலக நாடுகள் கேலி பேசும் கேவலமான ஊரே இன்று உனக்கு!!
அவுஸ்திரேலியாவில் இந்தியன் தாக்கப்பட்டால்
அது இனவெறியாம்
உலக நாடுகளில் தமிழினம் அடிபட்டால்
அது உள்ளூர் பிரச்சினையாம்
கல்தோன்றி - மண் தோன்றா காலத்தே
முன்தோன்றிய மூத்த குடியே -
போதும் நீ வாங்கிய அடி -
பழம்பெருமைகள் பேசியது போதும் தமிழனே
இனிமேலாவது நீ பாடம் படி !!
முல்லைக்கு தேர் கோடுத்த பாரி
மயிலுக்கு போர்வை தந்த பேகன்--
புறாவிற்கு தன் சதை அறுத்த சிபி சக்கரவர்த்தி -என
அக்றினைகள் படும் துன்பம் கூட
உன் துன்பம் என ஏற்று உதவினாயே
தமிழா அன்று !!
ஆற்றி படைத்த நாங்களே-
நீ படும் துன்பத்தை யாரும் ஏற்காமல்-தோற்றாயே
தமிழா -இன்று!
பழம்பெருமைகள் பேசியது போதும் தமிழனே - போதும்!
அநீதி எதிர்த்து - நீதி கேட்ட கண்ணகி,
தீயிட்டு எரித்தாளாம் மதுரையை அன்று
நியாயம் கேட்டும் அந்த தீ பரவட்டும்--ஆம்
நியாயம் கேட்டும் அந்த தீ எங்கும் பரவட்டும்--
உங்கள் எல்லார் உணர்விலும் தீ பரவட்டும் !!
உங்கள் எல்லார் உள்ளத்திலும் அந்த தீ பரவட்டும்-
நியாயம் கேட்கும் அந்தத் தீ எட்டுத் திக்கும் பரவட்டும்
அநீதி அழிய - உலகில் முடுக்கெல்லாம் தீ பரவட்டும்
நீதி தரட்டும்!!
அந்த நீதி நாள் வரும் வரை --
பழம்பெருமைகள் பேசியது போதும் தமிழனே----
-உண்மை மைந்தன் -

Post a Comment