Friday, September 25, 2009

Chatting-ஐ கண்டுபுடிச்சவன சாவடிங்கடா....

வணங்காமுடி: வணக்கம் நண்பரே.. எப்படி இருக்கீங்க.. வீட்டுல எல்லோரும் நலமா...

நண்பர்: எல்லாரும் நலம், நீங்க நல்லா இருக்கீங்களா?

வ.முடி: நல்லா இருக்கேன்.... அப்புறம் ஒரு விஷயம்... ஹி ஹி.. ஒன்னும் இல்ல..நேத்து ஒரு கவிதை எழுதுனேன்....

நண்பர்: அய்யய்யோ...

வ.முடி: ?

நண்: அதாவது.... நான் "அய்.." னு டைப் பண்ணேனா... அது டிஸ்ப்ளே-ல மாறிடுச்சி... நீங்க சொல்லுங்க.. என்ன கவிதை...

வ.முடி: கவிதை எழுதிட்டு உடனே என்னோட "முடிமட்டும்" வலைப்பூ-ல போட்டுட்டேன்.. நீங்களே ஓபன் பண்ணி பாருங்க.. பாத்துட்டு மறக்காம பின்னூட்டம் மட்டும் போட்ருங்க...

நண்: அதுக்கென்ன... பாத்துட்டா போச்சு.. எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதப் பண்ண மாட்டோமா...

சிறிது நேரம் கழித்து....

நண்: வீட்டுக்காரம்மா தலை-ல பெரிய ஐஸா வச்சுட்டீங்க போல...

வ.முடி: அதிருக்கட்டும்.. கவிதை எப்படின்னு சொல்லவே இல்லையே...

நண்: பிரமாதம்.... எப்படிங்க இந்தச் சின்ன வயசுல உங்களுக்கு இவ்வளவு அறிவு...

வ.முடி: ஹி ஹி...ரொம்பப் புகழாதிங்க...

நண்: இருந்தாலும் உங்க வார்த்தை வீச்சும், கவிதைய கையாள்ற உங்களோட லாவகமும்... அப்பப்பா... புல்லரிக்குதுங்க... நீங்க என்னோட நண்பர்னு சொல்லிக்கவே பெருமையா இருக்குங்க....

வ.முடி: அது... வந்து.... அது...

நண்: இருங்க.. இருங்க.. நான் சொல்லி முடிச்சர்றேன்... எப்படிங்க இப்படிலாம் முடியுது.. இப்ப தானா...இல்ல சின்ன புள்ளேல இருந்தே இப்படியா .. படிச்சதும் ஒன்னு தோணுச்சுங்க ... நீங்க வாழ்ந்துட்டு இருக்குற அதே காலத்துல நானும் வாழுறேன்னு நினைக்கிறப்ப... வாந்தி வருதுங்க.. சாரி... வார்த்தையே வரலங்க...

வ.முடி: (என்ன இது... கொஞ்சம் ஓவர் டோஸா இருக்கு... )... இருந்தாலும் இந்தக் கவிதைக்கு உங்களோட புகழ்ச்சி ரொம்ப அதிகம்...

நண்: அட நீங்க வேற.. உங்களை பாராட்ட சரியான வார்த்தை கிடைக்காம தடுமாறிட்டு இருக்கேன்... வெறும் வார்த்தைல என்னத்த பெருசா சொல்லிற முடியும்... எப்படி தான் இவ்வளவு ஞானம், அறிவு, தேடல், மொழிப்பற்று, ஆளுமை எல்லாம் வந்ததோ.... நீங்க பொறந்ததால இந்த தமிழ் மண்ணுக்கே பெருமைங்க... தயவு செஞ்சு கூடிய சீக்கிரம் நம்ம ஊருக்கு வந்துருங்க... தமிழ் நாட்டுக்கு உங்க சேவை கண்டிப்பாத் தேவை...

வ.முடி: நிஜமாத்தான் சொல்லுறீங்களா... (இல்ல.. பயபுள்ள சும்மா போட்டுப் பாக்குதோ ...)

நண்: அடிங்...ங்கொய்யால... ஏண்டா நாயே.. கக்கூஸ்-ல உக்காந்து கவிதை எழுதுற பழ்க்கம் இன்னும் உன்னை விட்டு போகலியா... பொண்டாட்டிக்கு லெட்டர் எழுதினா நேர்ல குடுக்கணும்... பயமா இருந்தா அவுங்க பாக்குற எடத்துல வச்சிட்டு பம்மிரனும்... அதுவும் முடியலன்னா தபால் ஆபீஸ்-ல பொட்டில போடணும்.... இதுல எதுவும் பண்ணாம, ப்ளாக்-ல போட்டு படிக்கரவன எல்லாம் பயித்தியக்காரன் ஆக்குனதும் இல்லாம, சும்மா போன என்னை வலியக் கூப்பிட்டு படிக்கச் சொல்லி பின்னூட்டம் வேற கேக்குறியா...

வ.முடி: ஹலோ... என்னங்க வார்த்தை நீளுது... கொஞ்சம் பாத்து பேசுங்க..

நண்: பாத்து பேசுரதுனாலதாண்டா இப்படி.. இல்லைனா நாறிடும்.. சின்னை புள்ளத் தனமா ஒரு வேலை பண்ணிட்டு பேசுது பாரு பேச்சு... நாயே நாயே.. என்னை பாத்து ஏண்டா இப்படி ஒரு கவிதைய படிக்க சொன்ன.... உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்...

வ.முடி: (உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே. நல்லவேளை.. கவிதைக்கு பதிலா நாம எழுதுன கதையக் குடுத்திருந்தா சிக்கி சீனாகிருப்பேன்... எஸ்கேப்புடா...)

நண்: டேய் டேய்.. என்னடா சைலெண்டா இருக்க.. ஏதாவது பேசுடா... வேலைக்கு கூட போக விடாம பண்ணிட்டு இப்ப என்னடா அமைதியா இருக்க... டேய்..
வணங்காமுடி is offline now... and will receive your messages next time when signing in...

3 comments:

Cliffnabird said...

;-) ;-) பாஸ் எப்டி பாஸ் இதெல்லாம் ...?? Mudiyalaaaaaaa பாஸ்.. நீங்க ஏன் சென்சார் போர்ட்ள JOB apply பன்னக்குடாதுனு நைட் எல்லாம் புரண்டு புரண்டு ore thinking Boss!! (மவனே... நெக்ஸ்ட் டைம் சுந்தர மீட் பண்றப்ப பொக்கெத்ல் scissor(not cigratte) வசிருக்காரானு செக் பண்ணிறனும் சொல்லிபுட்டேன்...., அப்புறம் நெக்ஸ்ட் chat conversationa அப்டியே நம்ப ப்லோக் ல போட்டுடனும்.. பயபுள்ள எல்லா கேட்ட வார்த்தையையும் remove பண்ணி புடுது ) ;-) ;-)

செம தமாஸ் பாஸ்.. ;-) ஹிஹிஹி

வணங்காமுடி...! said...

என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு... நான் ஏதோ ஒரு விளம்பரத்துக்கு இப்படி பதிவு போட்டா, இந்த விஷயம் நிசமாவே நடந்த மாதிரி காட்டுற சதி வேலை பண்ணுறீங்களா... ? ஹ.. இதெல்லாம் செல்லாது செல்லாது... வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க பாஸு..

Rajesh AR said...

Haha.. whos that friend da... must meet him once... some lines resembles our conversation!!!!

So am sure.. most of ur bloggers are sensible!